கண்ணந்தங்குடி.

சோலைகள் சூழ்ந்த சோழவளநாட்டில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ள ஒரத்தநாட்டின் வடகிழக்கு பகுதியில் 2 கி.மீ தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கண்ணந்தங்குடி.

இம்மண்ணில் பல பிரிவு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.இம்மக்களிடம் ஏற்றத்தாழ்வு என்னும் தீண்டாமை குணங்கள் இல்லாது மலையேறியம்மனுக்கு முன் அனைவரும் சமமே என வாழ்ந்துவருகின்றனர்

இவ்வூரின் வரலாறு சோழர் காலத்தோடு தொடர்புடைய காலமாக உள்ளது. இம்மக்கள் கண்ணந்தங்குடியில் குடியேறிய முதல் இடத்திற்கு பழைய மனை என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.செங்கனி ஏரியின் வலது கரையில் (சிங்கன் ஏரி) தோன்றிய இம்மண்ணின் வரலாறு இன்று உலகளவில் ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.

 
முத்தம்பாள்புரம் கண்ணந்தங்குடி.
மேலையூர் கீழையூர்
ஊரச்சி வடக்குனத்தம்
கூணிக்காடு ஆண்டிகாடு
மேலஇளந்தளிர்வெட்டி (பகுதி) மேல இளந்தளிர்வெட்டி (பகுதி);
செட்டிமண்டபம்(பகுதி) கீழ இளந்தளிர்வெட்டி செட்டிமண்டபம்(பகுதி)