பாதிரிப்பள்ளியும் கல்வியும்

தரங்கம்பாடி துறைமுகம் வழியாகத் தென்னாட்டில் அருட்பணியை வந்து களப்பண்யாற்றியவர்களில் குறிப்பிடதக்கவர் ஜெர்மனியை சார்ந்த அருள்திரு யோகான் பல்தாசர் கோலாப் என்ற டேனிஷ் பாதிரியர் ஆவர்.இவர் 1735 ஆம் ஆண்டு தஞ்சையில் தமக்கு முன்னமே பணியாற்றிகொண்டிருந்த பிரெஷியர் என்ற ஆங்கில அருட்பணியாளரோடு இணைந்து பணிபுரிந்தார்.இக்கால கட்டத்திலேயே கண்ணந்தங்குடியில் ஒரு ஆங்கிலப் பாதிரி பள்ளி மற்றும் "சூரியக்கல்"(நிழற்கடிகாரம்) அமைக்கப்பட்டது.

கடலூரில் 17.7.1759 இல் வந்து இறங்கிய கிறிஸ்டின் ஃபிரடரிக் சுவார்ட்சு பின்னர் 16 ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்து காவிரிக்கு தெற்கேயுள்ள பள்ளிகள், தேவாலயங்கள் ஆகியவைகளை மேற்பார்வையிடும் பணியை ஏற்றார்.பின் பல பகுதிகளில் பணியாற்றி மராத்திய மன்னர் துளசாவிடம் நட்பு கொண்டு(1763-1787) தஞ்சையை தலைமையிடமாக கொண்டு இறுதிவரை தங்கினார் பின்னர் தஞ்சையில் 1784 இல் தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியை நிறுவினார்.(மராட்டியர் கல்வெட்டுகள்-81)1765-1770 ஆம் ஆண்டுகளில்-சுவார்ச்சு பாதிரியர் தஞ்சையைச் சேருமுன்னரே கண்ணந்தங்குடியில் புனித பவுல் ஆலயம் கட்டப்பட்டது.அதன் உள்பக்கம் 20 ' அகலமும் 35 ' நீளமும் 11 ' உயரமும் கொண்ட திருப்பீடமும் அமைந்திருந்தது. அதனை மங்கலப்படைப்புச் செய்து முதல் ஆயராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் கோலாப் பாதிரியாரே ஆவர்.

மேலும் கோயிலுக்கு கீழபக்கத்தில் ஒரு மிஷினரி மாளிகையும் தெற்கே ஆசிரியர் தங்கும் ஒரு சுற்றுக்கட்டு வீடும் சுற்றிலும் திண்னணயோடு அமைந்திருந்தன. வீடே பாதிரிபைள்ளீயாகவும் இயங்கிவந்தது.பின்னர் உபதேசியாருக்கென தனியொரு வீடும் பள்ளீக்கென இரண்டு அரைகள் கொண்ட ஒரு தனிக்கட்டிடமும் அமைக்கப்பட்டிருந்தன.

தென்னிந்தியாவில் ஆங்கிலேய திருச்சபை நிர்வாகம் சீரமைப்புப் பெற்ற பின்னர் திருச்சபை வளர்ச்சி.நினறவுகள், தேவைகள் பற்றிய அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. ஜுன் 1836(நூற்றாண்டு நிறைவு) இல் எழுதப்பட்ட தஞ்சை அருள்திரு ஸ்மிட்ஷ் அவர்களின் அறிக்கை கண்ணந்தங்குடியில் கிறிஸ்துவ வீடுகள் 39, ஆண்கள் 34, பெண்கள் 43, குழந்தைகள் பள்ளியில் பயின்ற பிள்ளைகள் 42 என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் ஜூன் ஞான்முத்து எனவும், பள்ளி ஆசிரியர்கள் குருபாதம், திருசெல்வன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணந்தங்குடி கிறிஸ்துவர்கள் அனைவரும் தங்கள் கல்வி மற்றும் பணி காரணமாக அயலூர்களிலும் அயல் நாடுகளிலும் நிலைத்துவிட்டனர். உபதேசியர் குடும்பம் மட்டுமே ஊரில் நிலைத்துள்ளது. தஞ்சைப்பகுதியில் முதற் பள்ளியாகிய கண்ணந்தங்குடி பாதிரிப்பள்ளி அக்கரையின்மை காரணமாக தொடர்ந்து நடைபெறாமல் போற்று. பலமுறை இடைஇடையே திறக்கப்பட்டு மூடப்பட்டது .மேலும் பள்ளி ஊழியம் தொடர்பான கட்டிடங்கள் எல்லம் 1965க்கு முன்னரே சிதைந்து போனது.மேலும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இயலாத நிலையில் ஒரு பழம்பெரும் வரலாற்று நினைவுஸ் சின்னம் 2000த்தில் இடிக்கப்பட்டது.